Monday, November 18, 2013

உலா...

உலா...

பஞ்சு மெத்தை தேகம் - அதில்
பதுக்கி வச்ச மேகம்...

கொஞ்சிப் பேசும் கண்கள் - அவை
பகலில் தெரியும் விண்மீன்கள்...

சங்குக் கழுத்து ஒன்றும் - அது
தந்திடும் சங்க நாதம் என்றும்...

கேள்விக் குறியென செவிகள் - அதைக்
காண முயன்றால் முறைக்கும் விழிகள்...

கூந்தல் அமர்ந்திடும் இடை - அதன்
அழகைக் கூட்டிடும் அவள் நடை...

கழுத்தில் மின்னிடும் (தங்க) நகை - அதனைப்
போட்டியின்றி வென்றிடும் புன்னகை...

எல்லாம் ஒன்றாய் கொண்டதனால்...

கால்கொண்டு நடக்கும் நிலா என்பேன் -
அவள் மிதந்து செல்வதை நான் உலா என்பேன்...

சொல்வதைக் கேள் மகளே...

சொல்வதைக் கேள் மகளே...

எழுத்தை சொல்லி - அதை 
எழுதச் சொல்லி

கருத்தை சொல்லி - அதை 
கருதச் சொல்லி

கதை சொல்லி - அதன்
உரை சொல்லி

உண்ண சொல்லி - அதை 
உறக்க சொல்லி

உறங்க சொல்லி - அதை
உறங்கும் வரை சொல்லி

பகிரச் சொல்லி - அதை 
பக்குவமாய்ச் சொல்லி

தினமும் பலமுறை சொல்லி
அதை ஒருமுறை கூட திட்டாமல் சொல்லி

கொஞ்சம் கொஞ்சமாய் சொல்லி - அதை
கொஞ்சிக் கொஞ்சி சொல்லி

எல்லாம் சொன்னபின் சொல்வாள்
'எனக்கு தெரியும் - நீ சொல்லாத'

Saturday, September 14, 2013

துள்ளவோ... துவளவோ...

துள்ளவோ... துவளவோ...

இருப்பபோரை விட புதிதாக வருவோரின் (இளம் தலைமுறையின்) அறிவு கண்டு
துள்ளவோ...
இருப்போரின் பேராசையால் அவதியுறும் பூமி...
இனி வருவோரின் ஆசையால் ஆகப்போகும் நிலை எண்ணி
துவளவோ...

இந்நாளில் செவ்வாயில் நீர் அறியப்பட்டது கண்டு
துள்ளவோ...
செவ்வாயில் இருப்பதாய் சொல்கின்ற நீரை நம்பி - மனிதன்
பூமியில் இருக்கும் நீருக்கு இழைக்கும் அநீதி கண்டு
துவளவோ...

இத்தலைமுறை 'ஒரு குடும்பம் ஒரு குழந்தை' என்ற கொள்கை கண்டு
துள்ளவோ...
பின்வரும் தலைமுறை சகோதரப் பாசம் என்னவென்று
அறியாமல் போகும் நிலை எண்ணி
துவளவோ...


Monday, August 12, 2013

விற்பனை...

விற்பனை...

விலை மகள் கேட்டாள்...
நான் விற்பதை விமர்சிப்பவரே...
மற்றவர் விற்பதென்ன தெரியுமா?

வழக்குறைஞர் சட்டத்தை விற்கிறார்...
மருத்துவர் உடல் நலத்தை விற்கிறார்...

விவசாயி நிலவளத்தை விற்கிறார்...
ஆசிரியர் / கல்வியாளர் கல்வியை விற்கிறார்...

அரசியல்வாதி கொள்கையை விற்கிறார்...
வாக்காளர் வாக்கினை(ஓட்டை) விற்கிறார்...

மதகுருமார் மதத்தை விற்கிறார்...
சாதித் தலைவர் சாதியை விற்கிறார்...

அரசு அதிகாரி நேர்மையை விற்கிறார்...
வியாபாரி கிடைத்தையெல்லம் விற்கிறார்...


கூலி தொழில் செய்பவர் உடல் உழைப்பை விற்கிறார்...
நேர்மையாய் பணி புரிபவர் நேரத்தை விற்கிறார்...


எதையும் விற்காமல் யாரும் வாழ்வதில்லை...
என்ன விற்கிறோம் என்பதில் எனக்கு அக்கறையில்லை...

அஞ்சல் நீ...



ஓ அஞ்சலி...!!!
நான் எழுதத் துடிக்கும் அஞ்சல் நீ...

என்னை ஏங்க வைக்கும் ஏஞ்சல் நீ...
என் மனத்தை ஆட்டிடும் ஊஞ்சல் நீ...

தீராத கொஞ்சல் நீ...
தெவிட்டாத சர்க்கரைப் பொங்கல் நீ...

தீர்க்க முடியாத சிக்கல் நீ...
நினைக்காமலே வரும் விக்கல் நீ...

என்றும் வாழ்வாய் என் நெஞ்சில் நீ...

Wednesday, July 3, 2013

கணிப்பொறியாளனின் காதல்...

கணிப்பொறியாளனின் காதல்...


காதலி ஆவாய் என நினைத்தேனடி - என்
கணிணியில் கடவுச்சொல் ஆனாயடி...

உன்னிடம் காதல் சொல்ல உதவிய கணிணி
நீ மறுத்ததால் - இன்று என் காதலி ஆனதடி...

Saturday, June 29, 2013

நடிக்கிறேன் நான்...

நடிக்கிறேன் நான்...

நடிக்கிறேன் நான்
தெரிந்தும் தெரியாததுபோல்
உன் வாய்மொழி சொல்லும் விளக்கம் கேட்பதற்காகவே...

நடிக்கிறேன் நான்
புரிந்தும் புரியாததுபோல்
நீ இன்னொரு முறை சொல்ல வேண்டும் என்பதற்காகவே...

நடிக்கிறேன் நான்
பிரிந்தும் பிரியாததுபோல்
என் மனம் உன்னை மறந்துவிடக் கூடாது என்பதற்காக
என் மனதில் என்றும் நீ குடி கொண்டிருக்க வேண்டும் என்பதற்காகவே...









Sunday, June 16, 2013

கட்டிப்பிடி வைத்தியம்...

கட்டிப்பிடி வைத்தியம்...

கட்டிப்பிடி வைத்தியம் பார்த்தாளே - என்
காதல் நோய் கூடிடவே...

ஓரக்கண் பார்வை பார்த்தாளே - என்
கண் இமை மூடாமல் கனாக்காணவே...

இடைமேல் கூந்தலை ஆடவிட்டுத் தான் - என்
இலக்கினை இடைமறித்தாளே...

கொலுசின் நாதம் தந்து கொஞ்ச நேரம் - நான்
மெய் மறந்து ரசிக்கும் 'இசைஞானி' ஆனாளே...

Friday, May 24, 2013

பிரித்திட முடியுமா...

பிரித்திட முடியுமா...

கண்ணைப் பிரிந்தவன் காண்பதேது...
உன்னைப் பிரிந்து நான் வாழ்வதேது...

என் நிழலை என்னிடமிருந்து பிரித்து விட முடியும்...
உன் நினைவைப் பிரிக்க முடியுமா...

என் நிழலை என்னிடமிருந்து பிரிக்க - சூரியன் வேண்டும்...
உன் நினைவை என்னிடமிருந்து பிரிக்க - உன் தங்கை போதும்...

அன்னையின் பதில்...

அன்னையின் பதில்...

அங்கிருப்பவற்றைச் சொன்னவனே...
இங்கிருப்பதைக் கூறுகிறேன் - நினைவுகூர்...

உன்னைக் காணாது
உணவை விட மருந்தை அதிகம் உண்ணும்
தாயுண்டு... தந்தையுண்டு...

கண்ணால் skype ல் கண்டபின்...
உச்சி முகரத் துடிக்கும் உள்ளமுண்டு...

பிறை விழுந்த கண்ணால் அரைகுறையாய் கண்ட உன்னை
சிகிச்சை முடிந்தபின் முழுமையாய்க் காண ஏங்கும் கண்களுண்டு...

கூன் விழுமுன் தன பெயரனுடன் விளையாடத்
துடிக்கும் மனமுண்டு...

கல்லைப் பொன்னாய் மற்றும் மண்ணுண்டு...
மண்ணை வளம் செய்யும் மடுகுண்டு...

இனியேதும் காரணம் சொல்லாது...
உடனே கிளம்பி வா ஊருக்கு...
மணமுடிக்க மாமன் பொண்ணு காத்திருக்கு...


Thursday, May 16, 2013

கடவுளும் கண்ணாமூச்சியும்...

கடவுளும் கண்ணாமூச்சியும்...

கண் திறந்த கடவுள் சிலையிடம்
கண் மூடி வேண்டினான் மனிதன்...

'கடவுளே! என் கண்ணைத் திற...
என்னிடம் கண்ணாமூச்சி ஆடாதே
எனக்குத் தெரியும் நீ  செய்திடுவாய் என' என்று...

கடவுள் எண்ணினார்...

கடமையைச் செய் பலனை எதிர்பாராதே என்றேன் - கேட்கவில்லை
உன் கண்ணில் உள்ள தூசியை எடுத்து விட்டு பிறர் கண்ணைப் பற்றி பேசு என்றேன் - புரியவில்லை
உன் ஒட்டகத்தைக் கட்டி விட்டு  பின் தூங்கச் செல் என்றேன் - ஏற்கவில்லை

இனி என்னிடம் சொல்வதற்கோ, செய்வதற்கோ ஒன்றுமில்லை...
இவனின் மூடிய கண்களை திறந்திட வாய்ப்பில்லை...

Tuesday, April 2, 2013

கனவில் வாழ்கிறேன் நான்...

கனவில் வாழ்கிறேன் நான்...

கண்மூடிக் கிடக்கிறேன் நான்...
கனவில் வாழ்கிறேன் நான்...

கண் திறந்தால்...
நிஜம் காண பயம் தான் 
நிம்மதியற்ற வாழ்க்கை தான்...

கனவில் சாதனைகள் ஈடேறும்...
நிஜத்தில் வேதனைகள் பின்தொடரும்...

கனவில் வாழ்க்கை காதலியுடன்...
நிஜத்தில் அதுவே தனிமையுடன்...

நிஜம் என்ற ஒன்று இல்லாமல் இருந்திருந்தால்...
கனவிலேயே களித்திருப்பேன் - நான் 
கருவிலேயே வாழ்ந்து முடித்திருப்பேன்...

Tuesday, March 26, 2013

விலைமாது...



விலைமாது...

காதலைக் கேட்டேன்...
காமத்தைத் தந்தாள்...

கருவறையைக் கேட்டேன்...
கழிப்பறையைத் தந்தாள்...

உள்ளம் கேட்டேன்...
உதட்டைத் தந்தாள்...

நாணம் யாதெனைக் கேட்டேன்...
என்னை நாணிடைச்  செய்தாள்...

வாழ்விற்கு விலையேது என்று கேட்டேன் - இவ்வுலகில்
எல்லாவற்றிற்கும் ஒரு விலையுண்டு என்றாள்...

பதில்கள் எல்லாம் சரி...
கேள்விகள் தான் தவறு என்றார்கள்
அவளை இந்நிலைக்கிட்டவர்கள்...

விலைமாது - அவள் இழந்தவற்றிர்க்கு
விலையேது...

Tuesday, February 26, 2013

பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

 
பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

நீ நூறு ஆண்டுகள் நீடூடி வாழ வாழ்த்துகிறேன்...
பின் மனித இனத்தின் சிந்தனையில்
ஆயிரம் ஆண்டுகள் வாழ வாழ்த்துகிறேன்...

இவ்வுலகில் ஒவ்வொரு நாளும் வாழ்ந்திடு...
ஒரு நாளும் பிழைக்காதே...
பிழைத்தல் பிச்சைக்கு சமம்...

பிழைக்கைத் தெரியாதவனாய் இரு - தவறில்லை
வாழத் தெரியாதவனாய் இருந்திடாதே...

வாழ்வாங்கு வாழ்வதே வாழ்வு...
என் கடன் பணி செய்து கிடப்பதே...

பாேன்ற  பாென்  மொழிகளை மறவாதே...

உன் பணி பிறர்க்கும் பயணுள்ளதாய் இருக்க வாழ்த்துகிறேன்...

நலமும் வளமும்  பெற்று வாழ இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்...

Wednesday, February 13, 2013

ஈழத்தமிழன்

ஈழத்தமிழன்

தமிழன் என்று சொல்லடா...
தலை நிமிர்ந்து நில்லடா - உலகெங்கிலும்
ஈழம் தவிர...

ஈழத்தில்,
நின்ற தலை நிலத்தில் விழுந்திடுதாம்
பிறந்த பிள்ளை கருவுக்குள் புகுந்திடுதாம்...