Wednesday, February 29, 2012


இடஒதுக்கீடு...

விளையாட்டில் தேர்ந்த மாணவனுக்கு ஒன்று...
தாழ்த்தப்பட்ட மக்கள் சமூகத்தைச் சேர்ந்த மாணவனுக்கு ஒன்று...
கிராமத்து மாணவனுக்கு ஒன்று...
ஒடுக்கப்பட்ட மக்கள் சமூகத்தைச் சேர்ந்த மாணவனுக்கு ஒன்று...

இப்படி ஆளுக்கொன்று கொடுத்ததில் - கடைசியில்
இல்லாமல் போனதென்னவோ அந்தப் பள்ளியில்
முதல் மதிப்பெண் எடுத்த மாணவனுக்குத் தான்...
.
.
.
.
.
.
.
.
.
.
.
அவன் தன இளவலுக்குச் சொன்னான்...
'எப்படி ஆனாலும் நமக்குக் கிடைக்கப்போவதில்லை
நாமும் / யாரும் கேட்டுப் போராடப்போவதுமில்லை
தெரிந்தபின் எதிர்பார்த்து ஏமாறாதே - அதிலும்
முதல் மதிப்பெண் மட்டும் எடுத்துவிடாதே
உன் சோகம் பார்த்து ஊரே முதலைக் கண்ணீர் வடிக்கும்'

                                             - பாலா(ஜி)


Friday, February 24, 2012


பனிப்பொழிவு...

இயற்கை தீட்டிடும் சுண்ணாம்பு...
மனிதன் இட்ட பெயர் பனிப்பொழிவு...

வெள்ளைப் புயல் - உருவாக்கியதொரு
வெண்மைக் கடல்

காணும் இடமெல்லாம் வெள்ளி மணல் - அதில்
காணாமல் போனது கனல்

வருடா வருடம் மறக்காமல்...
வருடந்தோறும் தவறாமல்...

மனிதன் மனதில் இல்லா வெண்மைதனை...
அவனுக்கு நினைவூட்டிட பொழியுது வானமடா...

லட்சம் வருடத்திற்கு ஒருமுறை...
பொழியும் இடம்தனை மாற்றித்தான்...

புது துருவம், பருவம் தீட்டிடுதே...
இயற்கை தன் கைவண்ணம் காட்டிடுதே...
                                             - பாலா(ஜி)


Saturday, February 18, 2012

ஈழப்போர் - புரிந்து கொள்ளும் முயற்சி...


ஈழப்போர் - புரிந்து கொள்ளும் முயற்சி...

என் நண்பர் வீட்டிற்கு சென்றிருந்தேன். அங்கே நானும் நண்பரும் தமிழ் பற்றியும் ஈழப்போர் குறித்தும் விவாதித்துக் கொண்டிருந்தோம். அவர்  மகன் (சுமார் ஐந்து வயது இருக்கும்) என்ன பேசுகிறோம் என்று புரியாமல் பார்த்துக்கொண்டிருந்தான். அந்த ஐந்து வயது சிறுவனுக்கு ஈழப்ப்போரை புரிய வைக்கும் என் முதல் முயற்சி கீழே உள்ளது...
எழுதிய பின் உணர்ந்தேன், இதெல்லாம் புரியாத குழந்தையாகவே நான் இருந்திருக்கலாமோ என்று...


சித்திக் கொடுமை நடக்குதம்மா சிங்கள (இலங்கை) நாட்டினிலே...
அப்பன் வேடிக்கை பார்க்கிறாரம்மா அண்டை (இந்தியா) நாட்டினிலே...
அக்கா மட்டும் அழுகிராளம்மா (தமிழகம்) ஓலைக் குடிசையிலே...
அப்பாவை மீறி எனக்குதவ அவளுக்கும் துணிச்சல் இல்லே...

 மத்தெடுத்த சித்தியிடம் (சிங்கள அரசு) அப்பா கரண்டி (ஆயுதம்) கொடுத்தாரம்மா...
அவள் உள் காயம் மீதே சூடு ஒன்று போட்டாளம்மா...
தென்னை போல் என் வயது சூட்டில் தெரியுதம்மா...
அதில் உள்ள செத்த செல் (இறந்த தமிழர்கள்) இனி உயிர் பெறாதேயம்மா...
 
நீ சொன்ன சித்திக் கொடுமை இப்போ விளங்குதம்மா...
நான் பண்ண தப்பு மட்டும் விளங்கலயம்மா...
காட்டி அழப் பாட்டி (ஐ நா சபை) இல்லையம்மா...
அவளைப் பேசியே அப்பா விரட்டி விட்டாரம்மா...

போன வாரம் என் நகம் அவரின் கன்னம் கீரியதம்மா...
அதற்கு பரிசு தான் இந்த சூடா எனக் கேட்டு சொல்லம்மா...
கோழி மிதிச்சு குஞ்சு சாகாதுன்னு பழமொழி சொன்னியேம்மா...
குஞ்சு சாகும் வரை கோழி மிதிக்குமென்பது புதுமொழி ஆனதேம்மா...

என் மீது ஏறிச் செல்லப் பல பீரங்கி கத்திருக்கம்மா...
நான் ஏறிப் பரதேசம் செல்ல ஒரு ரயிலுவண்டி இல்லையம்மா...
ஓடிப்போக ஆசைதனம்மா...
பாழடைந்த வீடானாலும் நீ முச்சு விட்ட இடமாச்சேம்மா...

இந்த இருவரையும் நம்பி என்னைவிட்டு நீ போனதெங்கேம்மா...
நான் அங்கு வந்து சேரும் காலம் தொலைவில் இல்லையம்மா...
எனக்காக உலகெங்கும் பலர் அழுகிறார்கள் அம்மா...
நான் வடித்த குருதிக்கு அந்தக் கண்ணீர் ஈடாகாதேம்மா...

இத்தனை வலி பொறுக்கும் நான், ஈழத் தமிழனாம்மா...
இல்லை ஊரார் கேலி செய்வதுபோல், ஈனத் தமிழனாம்மா...
தமிழ் கூறும் நல்லுலகம் போனது எங்கேம்மா...
கூறாகிய தமிழினம் ஒன்றாவது எப்போம்மா...
                                                  - பாலா(ஜி)

Tuesday, February 14, 2012

இன்பமுறவா... துன்பமுறவா...

இன்பமுறவா... துன்பமுறவா...

'தமிழ் இனி மெல்லச் சாகும்' என்ற மொழி கேட்டு
இன்பமுறவா... துன்பமுறவா...

அதை ஒரு நொடியில் அழிந்திடச் சொல்லாது மெல்லச் சாகும் எனச் சொன்னது கண்டு 
இன்பமுறவா... துன்பமுறவா...

அப்படி மெல்லச் சாகும் வேளையில் பீனிக்ஸ் பறவையைப் போல் உயிர்த்தெழும் என்ற என் நம்பிக்கையைக் நினைத்து
இன்பமுறவா... துன்பமுறவா...

மலை போன்ற தமிழ்ச் செம்மொழி மடுகாகிக் கொண்டிருக்கும் வேளையில் 
அணை கட்ட உதவும் அணில் போன்ற என் செயல்களைக் கண்டு 
இன்பமுறவா... துன்பமுறவா...

தமிழுக்காக நான் கதறும் ஓசை அதன் சாவின் ஒப்பாரி ஆகி விடுமோ என்ற என் ஐயம் நினைத்து  இன்பமுறவா... துன்பமுறவா...
                                              - பாலா(ஜி)
தமிழுக்கும் அமுதென்று பேர்...

தமிழுக்கும் அமுதென்று பேர்...
வேண்டாம் - மாற்றிஎழுதுங்கள்
அமுதைப்போல் தமிழும் வழக்கற்றுப் போக வேண்டாம்
                                              - பாலா(ஜி)

என்ன தான் வேண்டும் உனக்கு...

வேண்டியதைக் தயங்காமல் கேள்...


ஒளி பிறக்க வழி என்னவென கேட்கிறேன் 
இருளில் கொண்டென்னை அடைக்கிறாய்

வெற்றிக்கு வழி என்னவென கேட்கிறேன் 
தோல்விகளில் துவளச் சொல்கிறாய்

என்ன நம்பும் ஜீவன் ஒன்று வேண்டுமென கேட்கிறேன்

உன்னை அன்றி வேறொருவர் இல்லையென சொல்கிறாய் 

வலிக்காத வாழ்வு வேண்டுமென கேட்கிறேன் 
வலிதாங்கும் உறுதிகொள் எனச் சொல்கிறாய் 

கடவுளே... என்னதான் வேண்டும் உனக்கு 
என்னைப்போல் மனம்திறந்து கேட்டுவிடு...
                                              - பாலா(ஜி)

நிஜக் கண்ணன்

நிஜக் கண்ணன் படும் பாடு...

நிழல் கண்ணனை கிழித்ததற்காக இந்த 
ஒன்றரை வயது
நிஜக் கண்ணனை அடித்தார்கள் 
மானுடர்கள்....
                                              - பாலா(ஜி)