Saturday, December 8, 2012

அழுகை ஓர் அழகு...

அழுகை ஓர் அழகு...

அவள்
தேம்பி தேம்பி அழுவதும்
ஒரு தெவிட்டாத அழகு தான்

மூச்சிரைத்து அழுவதும்
முகம் புதைத்து அழுவதும்
முத்தான அழகுதான்

கண்ணீர் கரை புரண்டோட அழுவதும்
கண் வற்றும் வரை அழுவதும்
காணக் கிடைக்காத அழகுதான்

இந்த எட்டு வயது பெதும்பைக்குத் (பெண்ணுக்குத்) தான்
எத்தனை அழுகை தெரியுதடா...
நான் வங்கித் தந்த எதுவும் அந்த அழுகையை நிறுத்த உதவலயடா...

                               - பாலா(ஜி)

Saturday, November 17, 2012

கொசுவின் சங்கீதம்


கொசுவின் சங்கீதம் 

யார் கற்று தந்த பாடல் இது...
யாருக்காக பாடப்படும் பாடல் இது...

என்
ஒவ்வொரு காதுக்கும் தனித்தனியாய்...
ஒரே ராகத்தில் தன்னந் தனியாய்...

பாடி நீ களைக்க மாட்டாயா...
பாடியபின் இளைக்க மாட்டாயா...

பாடியதால் பிழைக்கிறாயோ...
என்னிடம்
பிழைத்ததால் பாடுகிறாயோ...

நீ பாடும் பாட்டில் நான் கண்ட பிழை
என்றொன்றிருந்தால்
அது நீ பாடும் வேளையிலன்ரோ...

மரித்தபின் உணர்வாயோ
கொசுவே....
உன் பாடல் தற்கொலைக்கு முன்பான ஒப்பாரி என்பதை...

                                                         - பாலா(ஜி)

Friday, October 26, 2012

கனவு...


கனவு...


தூக்கத்தில் வருவதல்ல கனவு
தூங்கவிடாது துரத்துவதே கனவு

காண்பதெல்லாம் ஆகிவிடாது கனவு
கண்டுவிடத் துடிக்க வைப்பதாம் கனவு

பிறர் பாராட்ட சொல்வதல்ல கனவு
தன்னைத் தட்டி எழுப்புவுதே கனவு

ஒரு நாளில் எளிதில் மெய்ப்படுவதல்ல கனவு
ஒரு நாள் மெய்ப்படும் என்று நம்பிக்கையூற்றி
ஒவ்வொரு நாளும் உழைக்கத் தூண்டுவதே கனவு

இப்படி ஒரு கனவு மெய்ப்பட முனைந்து விட்டால்
பின் தூக்கமேது... வாழ்வில் துக்கமேது...

                                                        - பாலா(ஜி)




Monday, September 24, 2012

Money doesn't grow in trees. Is it?

A very important adage has been mentioned by our Prime Minister Dr. Manmohan Singh last week.


‘Money doesn’t grow in trees’ - True. Money is a community that better be earned. It is not something that is available for free. Better it never be. Because if it is, people would not work anymore. 
Now, let’s take a look at the situation under which this statement has been made. 
Dr. Singh has mentioned it to strengthen his government’s move on FDI reforms.
Let’s apply this to some other issues we face in India.
First lets apply this to the scams we are seeing all around us. As we have seen in 2G, there is nothing called ‘Zero Loss’.  Probably GOI may be able to recover the money from some scams (Coal). However, it may not be applicable where contracts have been awarded and work has started or completed (CAG, KG, Adarsh etc…). Money doesn’t grow in trees, Dr.Singh.
Second, lets apply this statement to the black money stashed in Swiss banks, which if retrieved can revive our economy. Even after knowing that the source of this money is highly likely to be illegitimate, why is the government of Dr.Singh not taking any concrete steps to bring it back? 
After all, Money doesn’t grow in trees Dr.Singh.
It’s time that we people of India; understand whose money Dr.Singh is talking about. It’s always the money of the non-ruling class doesn’t grow in trees.  The money of the ruling class not only grows in trees but also is very very safe.

Comment borrowed from my friends:

1. The voters of the Indian electorate will make Dr.Singh understand that 'Votes does not grow in trees as well'.

2. If money were to grow in trees, the UPA government would have auctioned it and created a scam out of it.

Tuesday, August 14, 2012

கனவு ஒன்று கண்டேனம்மா...


கனவு ஒன்று கண்டேனம்மா...

கனவு ஒன்று கண்டேனம்மா
பாரத மாதா கனவு ஒன்று கண்டேனம்மா

உன் பிள்ளைகள்
மதுவை விட மதியை நாடும் நாள் வருமென...
தன செல்வத்தை விட இந்த நாட்டின் செல்வத்தை மதித்திடும் நாள் வருமென...
கோயில்கள் கட்ட தரும் நன்கொடைய விட கல்விக் கூடங்கள் கட்ட அதிக நன்கொடைகள் தருவது போல்...
கனவு ஒன்று கண்டேனம்மா....


Sunday, August 12, 2012

தேசிய தின நல வாழ்த்துக்கள்...

மராத்தியர்களின் வீரம்
குஜராத்தியர்களின் வணிக திறன்
பஞ்சாபின் உழைப்பு
ராஜஸ்தானத்தின் நேர்மை
பாடளிபுத்ரத்தின் கனிம வளம்

இமாச்சலத்தின் பனி படர்ந்த மலை
வங்காளத்தின் கலை
கன்னடத்தின் சிலை
தெலுங்கானாவின் இசை
காஷ்மீர் மற்றும் கேரளாவின் அழகு
வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்

இது எல்லாம் சேர்ந்தது தான் இந்தியா...

நமக்குள் சண்டைகள் வரலாம்...  ஆனால் அவை நம்ம ஒரு போதும் பிரித்துவிடாது...
மாறாக நாம் ஒருவரை ஒருவர் மேலும் புரிந்து கொள்ள வழி வகுக்கும்...
இந்த எண்ணத்துடனே மீண்டும் சளைக்காமல் சண்டையிடுவோம்...

உணர்வோம்... ஒருங்கிணைவோம்... உழைப்போம் (இந்த நாடு முன்னேற) ...

'பாருக்குள்ளே நல்ல நாடு நம் பாரத நாடு'
என்ற சொல்லை மெய்ப்பித்திடுவோம்...
நூறு ஆண்டுகள் கழித்து அல்ல... நமது வாழ்நாளில்

இனிய தேசிய தின (சுதந்திர தின மற்றும் குடியரசு தின)  நல வாழ்த்துக்கள்....

                                                  - பாலா(ஜி)
அவளிடம் சொன்னேன்...

ஆசையைச் சொன்னேன் - அசடு என்றாள்
கனவைச் சொன்னேன் - கானல் என்றாள்
காதலைச் சொன்னேன் - காமம் என்றாள்
உள்ளதைச் சொன்னேன் - உளறல் என்றாள்
என் உள்ளத்தைச் சொன்னேன் - மௌனமானாள்...

                                                      - பாலா(ஜி)

Thursday, July 26, 2012

கனவுக் காதலிக்கு ஒரு நிஜக் கவிதை...

நீ இல்லாமல் என்னால் வாழ முடியாது என சொல்ல விருப்பம் தான்...
நீ இல்லாமலே வாழ்ந்து விட்டேன் முதல் இருபது வருடம் நான்...

உன்னைக் காணாமல் போயிருந்தால் என்ன தொலைத்திருப்பேன் நான்...
உன்னைக் கண்டதினால் என்னைத் தொலைத்தேன் நான்...

                                                             - பாலா(ஜி)

(காதல்) கல்யாணம்...

தாய் : பெண்ணை நான் பார்த்து விட்டேன்.
           எனக்குப் பிடித்திருக்கு
           இனி நீ பார்த்து உன் முடிவு என்னவென்று சொல்...

மகன் : அதையே தானம்மா நானும் சொல்ல நினைத்தேன்...


Sunday, June 3, 2012

கனவா? களவா?...


உன்னை என் தூக்கத்திலும் காண்கிறேன்
இது கனவா? களவா?

உன் மீது அதீத அக்கறை கொள்கிறேன்
இது உரிமையா? உபத்திரவமா?

உன் நினைவாகவே அலைகிறேன்
இது பிரியமா? பித்தா?

உன்னுடன் வாழ்வதாகவே எண்ணுகிறேன்
இது கனவா? நிஜமா?

நீ இன்றி வாழ முடியாது என அஞ்சுகிறேன்
இது காதலா? கானலா?

உன்னை என் மூச்சககாவே நினைக்கிறேன்
நீ என் வாசாமா? சுவாசாமா?

தமிழே - நல்ல வேளை நீ மாற்றான் தோட்டத்து மல்லிகை இல்லை...

உன்னை இப்படி நினைத்துக் கொண்டே இருப்பதற்காக
யாரும் என்னை தண்டிக்கப் போவதில்லை...

                                            - பாலா(ஜி)




உருமாற்றம்...
மேகம் போல பயனின்றி வானில் மிதந்தேனே...
மலை என வந்தெனைத் தடுத்தாயே... மழை என பொழிந்திட வைத்தாயே...
உருவிழந்தேன் நானடி - பிறருக்கு உபயோகமானேன் நானடி.. எல்லாம் உன்னால் தானடி...
மலையைக் காதலித்தால் மடுவாதல் தண்டனையோடி...
மீண்டும் வருவேன் நானடி...உன்னால் மீண்டும் உருமாற்றம் அடைந்திடத் தானடி....
கர்வம் கொள்ளாதேடி - கால வெள்ளத்தில் ஒருநாள் கடலாகிப் போவாய் நீயும் தானடி...
 அன்று நாம் கலப்போமடி...
அதுவரை நான் உன்னை தழுவிட மீண்டும் மீண்டும் மேகமாய் வருவேனடி...

                                            - பாலா(ஜி)



India and its Swiss Money - How can we bring it back?


This is a simple plan to bring out the money hidden in Swiss Bank accounts to India.
I am sure, the learned people of our great nation can bring a better idea than this.

Mar 1,2013
Publish the plan of how to bring the money from Swiss banks.(Below is a simple example)

Mar 31, 2013
Get the list of Account holders from Swiss Bank and their balance from the last 20 years.
This must include the ones whose accounts have been closed in the last 20 years.

April 1,2013
Re-Open the VDIS (Voluntary Disclosure of Income Scheme). 
By this scheme, all the money from the Swiss Bank can be brought to Indian Banks with a specified percentage of Tax Paid.
This scheme should be open till Mar 31, 2014 to give enough time for Individuals to decide & act.

Note : VDIS was first announced by Mr.P.Chidambaram in 1998 (the then Finance Minister) as a means to bring out the Black money. 
It was much appreciated & he went on to be known as one of the Best Finance ministers in Asia.

Apart from the closing charges of the Swiss bank account, 10% (or 20%) of the remaining amount will be directly transferred to the Individual's bank account in India.
This is more than enough of what he/she deserves.
The rest of the amount will be deposited into the 'Reserve Bank of India'.


Jun 30,2013
Conduct an official training for those who have money in Swiss banks about the 'Negative effects of Black Money in the Economy'. 
Be sure not to identify anyone. Even the instructors should not know the individuals.
The country has the duty to educate its citizens on the ill-effects of black money, rather than simply punishing them.

April 1,2014
Release the official list of those who have not returned their money from Swiss banks through VDIS and declare them as 'Traitors of the Nation'.

April 30, 2014
Withdraw protection to the Life and Property of those Traitors.(A 'Shoot at sight' order can also be declared  :-) )
Confiscate all their passports, property and Freeze their Bank accounts in India.
Declare them as 'Traitors of the Indian Nation' to the world & International community.

June 30,2014
Release the list of those who have returned their money to India.(Unless they want to remain anonymous)
Reveal the amount of money accumulated so far and call for plans to streamline the amount into Development efforts.
States may ask for their share of it, which sometimes does seem fair.
In that case, states can be promised to be given a specific percentage of the amount, recovered from the Individual belonging to their state.
However, the stakeholder states should come up with plan on how they intend to spend the money.
This plan should be validated by a special committee to make any recommended changes.

Mar 31,2014
Come up with a 5-year plan on how to spend/distribute the money with specific futuristic sectors(Education, Energy, Healthcare, Infrastructure) that need the most attention.
Freeze the money in the Reserve bank till this date and use it only as planned.

Mar 31, 2015
Publish the results every year in the Union Budget, so that people can see and evaluate the results.

Mar 31, 2019
Publish the end result of the amount spent and the evaluate the results.

Sometimes, all it takes is just the first step...and the Will to make the 'First step'....

Regards,
Balaji R

Wednesday, April 4, 2012

சுயநலவாதியாக இருக்க வேண்டும்...

இன்றைய உலகில் நாம் எல்லோரும் சுயநலவாதியாக இருக்க வேண்டும் என்று கருத்து உள்ளது...
எப்படிப்பட்ட சுயநலவாதியாய் இருக்க வேண்டும் என்பது பற்றிய சில எண்ணங்கள் கீழே...


கிணற்றுத்தவளை போல், தன்பணி மீது மட்டுமே
கவனம் கொண்ட சுயநலவாதியாக இருக்க வேண்டும்

அப்பணி பிறருக்கு தீங்கு விளைவிக்காமல் செய்து முடித்திடும்
திறமைமிகு சுயநலவாதியாக இருக்க வேண்டும்

எதற்காகவும் கொள்கையை விட்டுக் கொடுக்காத
இரும்பு இதயம் கொண்ட சுயநலவாதியாக இருக்க வேண்டும்

பிறரைப் பற்றி பேச நேரமில்லாது உழைத்துக் கொண்டேயிருக்கும்
எறும்பின் குணம் கொண்ட சுயநலவாதியாக இருக்க வேண்டும்

தன்னையும்  தன்னைப் போல் எல்லா உயிரையும்
மதிக்கும் சுயநலவாதியாக இருக்க வேண்டும்

பிறரின் வெற்றியை வாழ்த்தவோ விமர்சிக்கவோ அறியாத
பேதை சுயநலவாதியாக இருக்க வேண்டும்

பிறர் பற்றி சொல்லப்படும் விமர்சனங்களை கேட்க முடியாத
செவிட்டு சுயநலவாதியாக இருக்க வேண்டும்

மற்றவரின் குறைகளைக் காண முடியாத
குருட்டு சுயநலவாதியாக இருக்க வேண்டும்

மற்றவரிடம் உதவி கேட்க நா எழாத
ஊமை சுயநலவாதியாக இருக்க வேண்டும்

கொடுத்தக் கடனைச் சென்று திருப்பிக் கேட்கும் நிலை வரின்
கால்கள் மரத்துப்போய்விடும்
நொண்டி சுயநலவாதியாக இருக்க வேண்டும்

இப்படி ஒரு சுயநலவாதியை இவ்வுலகம் பரிகசித்தால்
வெகுசுலபமாக பிறர் மீது பழி சொல்லாது
'தீதும் நன்றும் பிறர் தர வாரா' எனச் சொல்லும்
தைரியமுள்ள சுயநலவாதியாக இருக்க வேண்டும்

யார் சொன்னது சுயநலவாதிகள் கோழைகள் என்று....

இருந்து தான் பாருங்களேன் இப்படி ஒரு சுயநலவாதியாக
உலகம் ஒரு நாள் சொல்லலாம்
'சுயநலவாதிகளை எல்லோரும் வெறுக்கப்பட வேண்டியவர்கள் அல்ல' என்று

                                       - பாலா(ஜி)


பி.கு. :
வாழ்த்தினால் வெற்றியில் பங்கு கொள்ள வந்தவன் என்பர்...
விமர்சித்தால் வயிற்றிரிச்சல் கொண்டவன் என்பர்...
ஆதலால் இரண்டும் வேண்டாம் என்பேன் நான்...
பிறரின் வாழ்த்தலும் விமர்சித்தாலும் தன்னை பாதிக்காத வண்ணம் வாழ்பவனே உண்மையில் வெற்றி கொண்டவன்...
அவன் உங்கள் மௌனத்தை கண்டிப்பாய் புரிந்து கொள்வான்...



Thursday, March 8, 2012

தலை நிமிர்ந்து நில்...

தமிழே - நீயும் தஞ்சை போல தலை நிமிர்ந்து நில்
நிழல் கூட நிலத்தில் விழாமல்...
                                             - பாலா(ஜி)

Sunday, March 4, 2012


கேளடி என் கண்மணி...

என் கற்பனையில், இருபத்தோராம் நூற்றாண்டில் பகத் சிங்க் பிறந்திருந்தால், அவர் காதலிக்கு இப்படித் தான் ஒரு கடிதம் எழுதி இருப்பார்....

வீடு துறக்க வேண்டுமடி - என் கண்மணி
நம் நாடு சிறக்க வேண்டுமடி...

உன்னை மறக்க வேண்டுமடி - என் கனவுக் காதலி
நான் உண்மையைத் தழுவ வேண்டுமடி...

தனி மனித பெருமைக்காக இல்லையடி - நம்
நாட்டின் சிறுமைப்பயணம் முடிவுற வேண்டுமடி...

தாத்தன் போராடி வாங்கிய சுதந்திரமடி - அதை
அப்பன் அனுபிவத்தது தான் குற்றமடி...

நானும் அத்தவறை செய்தேனேயானால் - நம்
அடுத்த தலைமுறை அடிமையாய்ப் போகுமடி...

நாடி துடிக்குதடி... என் நெஞ்சு அடைக்குதடி...

மீண்டும் புரட்சி ஒன்று நிகழாமல் போனால் - வாழ்வது
நாமாக இருப்பினும் வீழ்வது நாடாக இருக்குமடி...

கல்வி ஏட்டோடு நின்றதடி - கட்டிக் காத்த
பகுத்தறிவும் காணாமற் போனதடி...

காட்டாற்றை உருவாக்கும் வேளை வந்ததடி - உன்
குழாயடி சண்டைக்கு என்னை அழைக்காதேடி...

வீட்டுக்கு ஒரு பிள்ளை போர்முனைக்கு வேண்டுமடி - உன்
வீட்டில் சொல்லி விட்டு நீயும் என்னுடன் வந்திடுடி...

விருப்பமில்லையெனில் - விடை கொடு என் கண்மணி
உன்னிடம் திரும்ப மாட்டேன் - என்னை விட்டு விடு என் கண்மணி...

                                                          - பாலா(ஜி)

Wednesday, February 29, 2012


இடஒதுக்கீடு...

விளையாட்டில் தேர்ந்த மாணவனுக்கு ஒன்று...
தாழ்த்தப்பட்ட மக்கள் சமூகத்தைச் சேர்ந்த மாணவனுக்கு ஒன்று...
கிராமத்து மாணவனுக்கு ஒன்று...
ஒடுக்கப்பட்ட மக்கள் சமூகத்தைச் சேர்ந்த மாணவனுக்கு ஒன்று...

இப்படி ஆளுக்கொன்று கொடுத்ததில் - கடைசியில்
இல்லாமல் போனதென்னவோ அந்தப் பள்ளியில்
முதல் மதிப்பெண் எடுத்த மாணவனுக்குத் தான்...
.
.
.
.
.
.
.
.
.
.
.
அவன் தன இளவலுக்குச் சொன்னான்...
'எப்படி ஆனாலும் நமக்குக் கிடைக்கப்போவதில்லை
நாமும் / யாரும் கேட்டுப் போராடப்போவதுமில்லை
தெரிந்தபின் எதிர்பார்த்து ஏமாறாதே - அதிலும்
முதல் மதிப்பெண் மட்டும் எடுத்துவிடாதே
உன் சோகம் பார்த்து ஊரே முதலைக் கண்ணீர் வடிக்கும்'

                                             - பாலா(ஜி)


Friday, February 24, 2012


பனிப்பொழிவு...

இயற்கை தீட்டிடும் சுண்ணாம்பு...
மனிதன் இட்ட பெயர் பனிப்பொழிவு...

வெள்ளைப் புயல் - உருவாக்கியதொரு
வெண்மைக் கடல்

காணும் இடமெல்லாம் வெள்ளி மணல் - அதில்
காணாமல் போனது கனல்

வருடா வருடம் மறக்காமல்...
வருடந்தோறும் தவறாமல்...

மனிதன் மனதில் இல்லா வெண்மைதனை...
அவனுக்கு நினைவூட்டிட பொழியுது வானமடா...

லட்சம் வருடத்திற்கு ஒருமுறை...
பொழியும் இடம்தனை மாற்றித்தான்...

புது துருவம், பருவம் தீட்டிடுதே...
இயற்கை தன் கைவண்ணம் காட்டிடுதே...
                                             - பாலா(ஜி)


Saturday, February 18, 2012

ஈழப்போர் - புரிந்து கொள்ளும் முயற்சி...


ஈழப்போர் - புரிந்து கொள்ளும் முயற்சி...

என் நண்பர் வீட்டிற்கு சென்றிருந்தேன். அங்கே நானும் நண்பரும் தமிழ் பற்றியும் ஈழப்போர் குறித்தும் விவாதித்துக் கொண்டிருந்தோம். அவர்  மகன் (சுமார் ஐந்து வயது இருக்கும்) என்ன பேசுகிறோம் என்று புரியாமல் பார்த்துக்கொண்டிருந்தான். அந்த ஐந்து வயது சிறுவனுக்கு ஈழப்ப்போரை புரிய வைக்கும் என் முதல் முயற்சி கீழே உள்ளது...
எழுதிய பின் உணர்ந்தேன், இதெல்லாம் புரியாத குழந்தையாகவே நான் இருந்திருக்கலாமோ என்று...


சித்திக் கொடுமை நடக்குதம்மா சிங்கள (இலங்கை) நாட்டினிலே...
அப்பன் வேடிக்கை பார்க்கிறாரம்மா அண்டை (இந்தியா) நாட்டினிலே...
அக்கா மட்டும் அழுகிராளம்மா (தமிழகம்) ஓலைக் குடிசையிலே...
அப்பாவை மீறி எனக்குதவ அவளுக்கும் துணிச்சல் இல்லே...

 மத்தெடுத்த சித்தியிடம் (சிங்கள அரசு) அப்பா கரண்டி (ஆயுதம்) கொடுத்தாரம்மா...
அவள் உள் காயம் மீதே சூடு ஒன்று போட்டாளம்மா...
தென்னை போல் என் வயது சூட்டில் தெரியுதம்மா...
அதில் உள்ள செத்த செல் (இறந்த தமிழர்கள்) இனி உயிர் பெறாதேயம்மா...
 
நீ சொன்ன சித்திக் கொடுமை இப்போ விளங்குதம்மா...
நான் பண்ண தப்பு மட்டும் விளங்கலயம்மா...
காட்டி அழப் பாட்டி (ஐ நா சபை) இல்லையம்மா...
அவளைப் பேசியே அப்பா விரட்டி விட்டாரம்மா...

போன வாரம் என் நகம் அவரின் கன்னம் கீரியதம்மா...
அதற்கு பரிசு தான் இந்த சூடா எனக் கேட்டு சொல்லம்மா...
கோழி மிதிச்சு குஞ்சு சாகாதுன்னு பழமொழி சொன்னியேம்மா...
குஞ்சு சாகும் வரை கோழி மிதிக்குமென்பது புதுமொழி ஆனதேம்மா...

என் மீது ஏறிச் செல்லப் பல பீரங்கி கத்திருக்கம்மா...
நான் ஏறிப் பரதேசம் செல்ல ஒரு ரயிலுவண்டி இல்லையம்மா...
ஓடிப்போக ஆசைதனம்மா...
பாழடைந்த வீடானாலும் நீ முச்சு விட்ட இடமாச்சேம்மா...

இந்த இருவரையும் நம்பி என்னைவிட்டு நீ போனதெங்கேம்மா...
நான் அங்கு வந்து சேரும் காலம் தொலைவில் இல்லையம்மா...
எனக்காக உலகெங்கும் பலர் அழுகிறார்கள் அம்மா...
நான் வடித்த குருதிக்கு அந்தக் கண்ணீர் ஈடாகாதேம்மா...

இத்தனை வலி பொறுக்கும் நான், ஈழத் தமிழனாம்மா...
இல்லை ஊரார் கேலி செய்வதுபோல், ஈனத் தமிழனாம்மா...
தமிழ் கூறும் நல்லுலகம் போனது எங்கேம்மா...
கூறாகிய தமிழினம் ஒன்றாவது எப்போம்மா...
                                                  - பாலா(ஜி)

Tuesday, February 14, 2012

இன்பமுறவா... துன்பமுறவா...

இன்பமுறவா... துன்பமுறவா...

'தமிழ் இனி மெல்லச் சாகும்' என்ற மொழி கேட்டு
இன்பமுறவா... துன்பமுறவா...

அதை ஒரு நொடியில் அழிந்திடச் சொல்லாது மெல்லச் சாகும் எனச் சொன்னது கண்டு 
இன்பமுறவா... துன்பமுறவா...

அப்படி மெல்லச் சாகும் வேளையில் பீனிக்ஸ் பறவையைப் போல் உயிர்த்தெழும் என்ற என் நம்பிக்கையைக் நினைத்து
இன்பமுறவா... துன்பமுறவா...

மலை போன்ற தமிழ்ச் செம்மொழி மடுகாகிக் கொண்டிருக்கும் வேளையில் 
அணை கட்ட உதவும் அணில் போன்ற என் செயல்களைக் கண்டு 
இன்பமுறவா... துன்பமுறவா...

தமிழுக்காக நான் கதறும் ஓசை அதன் சாவின் ஒப்பாரி ஆகி விடுமோ என்ற என் ஐயம் நினைத்து  இன்பமுறவா... துன்பமுறவா...
                                              - பாலா(ஜி)
தமிழுக்கும் அமுதென்று பேர்...

தமிழுக்கும் அமுதென்று பேர்...
வேண்டாம் - மாற்றிஎழுதுங்கள்
அமுதைப்போல் தமிழும் வழக்கற்றுப் போக வேண்டாம்
                                              - பாலா(ஜி)

என்ன தான் வேண்டும் உனக்கு...

வேண்டியதைக் தயங்காமல் கேள்...


ஒளி பிறக்க வழி என்னவென கேட்கிறேன் 
இருளில் கொண்டென்னை அடைக்கிறாய்

வெற்றிக்கு வழி என்னவென கேட்கிறேன் 
தோல்விகளில் துவளச் சொல்கிறாய்

என்ன நம்பும் ஜீவன் ஒன்று வேண்டுமென கேட்கிறேன்

உன்னை அன்றி வேறொருவர் இல்லையென சொல்கிறாய் 

வலிக்காத வாழ்வு வேண்டுமென கேட்கிறேன் 
வலிதாங்கும் உறுதிகொள் எனச் சொல்கிறாய் 

கடவுளே... என்னதான் வேண்டும் உனக்கு 
என்னைப்போல் மனம்திறந்து கேட்டுவிடு...
                                              - பாலா(ஜி)

நிஜக் கண்ணன்

நிஜக் கண்ணன் படும் பாடு...

நிழல் கண்ணனை கிழித்ததற்காக இந்த 
ஒன்றரை வயது
நிஜக் கண்ணனை அடித்தார்கள் 
மானுடர்கள்....
                                              - பாலா(ஜி)