இது குழந்தை பாடும் தாலாட்டு...
Saturday, June 27, 2026
பூவும் வேர்க்குது
தூரமும் நேர வித்தியாசமும்
Tuesday, January 25, 2022
மரம் போல வாழ...
Monday, January 14, 2019
காதல் வைரஸ்
வழக்கமாக...
என் கை கால்களை பதம் பார்க்கும் கொசு...
இம்முறை என் கன்னத்தை கடித்தது...
பாவம்... அதற்கு தெரிய வாய்ப்பில்லை...
உன்னைக் கடித்த பின்...
உன்னுள் உள்ள காதல் வைரஸ் தன்னுள் தொற்றி கொண்டதென்று...
Friday, September 7, 2018
நிறுத்த நினையாமல்...
நாளை வரும் என்ற நினைவாலும்....
அந்த நாளையில் நீ வருவாய் என்ற
நம்பிக்கையாலும்....
நாழிகைகள் ஓடுது....நாட்களும் நகருது....
கடி காரங்களை நிறுத்தலாம்....
காலத்தை நிறுத்த முடியாது....
அப்படியே நிறுத்தினாலும்...
நம் காதலும் அல்லவோ உடன் நின்று போகும்....
ஓடும் நேரத்தை நிறுத்த நினையாமல்...
அது
ஓடி முடியும் முன் இணைந்து விடுவோம் வா....
Sunday, September 10, 2017
அலைகள்
அலைகள்...
பூமியிலுள்ள எல்லா கடற்கரைகளின் ஒருமித்த முதல் அடையாளம்...
அலைகள்...
கடல் நீருடன் ஆடும் காற்றின் விளையாட்டுக்கு பிறந்தது...
அலைகள்...
கால மாற்றத்தில் மாறாதது...
தட்ப வெப்பத்தை தவிடு பொடி ஆக்கக்கூடியது...
அலைகள்...
முடிவின்றி பூமியில் நிகழும் கோடிக்கணக்கான வற்றில் முக்கியமானது....
அலைகள்....
சூரியனும் சந்திரனும் உறங்கும் போதும் உறங்காதது...
அலைகள்...
விடையில்லா விடா முயற்சிகளின் வெறுக்க முடியாத உதாரணம்...
அலைகள்...
தன் மீது விளையாடும் மாந்தர்களை ஸ்பரிசிக்கவோ...
அல்லது அவர்களின் காலடி மண் திருடவோ...
அவர்கள் கட்டி வைத்த மணல் கோட்டைகளை இடிக்கவோ....
உயிறற்ற கிளிஞ்சல் களை கரை சேர்க்கவோ...
ஓடும் நண்டுகளில் ஒன்றையாவது உள்ளிழுக்கவோ...
இப்படி எதற்காக வந்தோமென தெரியாமலே...
ஆக்ரோஷமாய் கரை தழுவி...
அனுதாபமாய் நுரை கக்கி... பின் அமைதியாய் மீண்டும் கடலைச் சென்றடையும்...
அலைகள்...