கேளடி என் கண்மணி...
என் கற்பனையில், இருபத்தோராம் நூற்றாண்டில் பகத் சிங்க் பிறந்திருந்தால், அவர் காதலிக்கு இப்படித் தான் ஒரு கடிதம் எழுதி இருப்பார்....
வீடு துறக்க வேண்டுமடி - என் கண்மணி
நம் நாடு சிறக்க வேண்டுமடி...
நம் நாடு சிறக்க வேண்டுமடி...
உன்னை மறக்க வேண்டுமடி - என் கனவுக் காதலி
நான் உண்மையைத் தழுவ வேண்டுமடி...
தனி மனித பெருமைக்காக இல்லையடி - நம்
நாட்டின் சிறுமைப்பயணம் முடிவுற வேண்டுமடி...
தாத்தன் போராடி வாங்கிய சுதந்திரமடி - அதை
அப்பன் அனுபிவத்தது தான் குற்றமடி...
நானும் அத்தவறை செய்தேனேயானால் - நம்
அடுத்த தலைமுறை அடிமையாய்ப் போகுமடி...
நாடி துடிக்குதடி... என் நெஞ்சு அடைக்குதடி...
மீண்டும் புரட்சி ஒன்று நிகழாமல் போனால் - வாழ்வது
நாமாக இருப்பினும் வீழ்வது நாடாக இருக்குமடி...
கல்வி ஏட்டோடு நின்றதடி - கட்டிக் காத்த
பகுத்தறிவும் காணாமற் போனதடி...
காட்டாற்றை உருவாக்கும் வேளை வந்ததடி - உன்
குழாயடி சண்டைக்கு என்னை அழைக்காதேடி...
வீட்டுக்கு ஒரு பிள்ளை போர்முனைக்கு வேண்டுமடி - உன்
வீட்டில் சொல்லி விட்டு நீயும் என்னுடன் வந்திடுடி...
விருப்பமில்லையெனில் - விடை கொடு என் கண்மணி
உன்னிடம் திரும்ப மாட்டேன் - என்னை விட்டு விடு என் கண்மணி...
- பாலா(ஜி)
No comments:
Post a Comment