Showing posts with label கேளடி என் கண்மணி.... Show all posts
Showing posts with label கேளடி என் கண்மணி.... Show all posts

Sunday, March 4, 2012


கேளடி என் கண்மணி...

என் கற்பனையில், இருபத்தோராம் நூற்றாண்டில் பகத் சிங்க் பிறந்திருந்தால், அவர் காதலிக்கு இப்படித் தான் ஒரு கடிதம் எழுதி இருப்பார்....

வீடு துறக்க வேண்டுமடி - என் கண்மணி
நம் நாடு சிறக்க வேண்டுமடி...

உன்னை மறக்க வேண்டுமடி - என் கனவுக் காதலி
நான் உண்மையைத் தழுவ வேண்டுமடி...

தனி மனித பெருமைக்காக இல்லையடி - நம்
நாட்டின் சிறுமைப்பயணம் முடிவுற வேண்டுமடி...

தாத்தன் போராடி வாங்கிய சுதந்திரமடி - அதை
அப்பன் அனுபிவத்தது தான் குற்றமடி...

நானும் அத்தவறை செய்தேனேயானால் - நம்
அடுத்த தலைமுறை அடிமையாய்ப் போகுமடி...

நாடி துடிக்குதடி... என் நெஞ்சு அடைக்குதடி...

மீண்டும் புரட்சி ஒன்று நிகழாமல் போனால் - வாழ்வது
நாமாக இருப்பினும் வீழ்வது நாடாக இருக்குமடி...

கல்வி ஏட்டோடு நின்றதடி - கட்டிக் காத்த
பகுத்தறிவும் காணாமற் போனதடி...

காட்டாற்றை உருவாக்கும் வேளை வந்ததடி - உன்
குழாயடி சண்டைக்கு என்னை அழைக்காதேடி...

வீட்டுக்கு ஒரு பிள்ளை போர்முனைக்கு வேண்டுமடி - உன்
வீட்டில் சொல்லி விட்டு நீயும் என்னுடன் வந்திடுடி...

விருப்பமில்லையெனில் - விடை கொடு என் கண்மணி
உன்னிடம் திரும்ப மாட்டேன் - என்னை விட்டு விடு என் கண்மணி...

                                                          - பாலா(ஜி)