உருமாற்றம்...
மேகம் போல பயனின்றி வானில் மிதந்தேனே...
மலை என வந்தெனைத் தடுத்தாயே... மழை என பொழிந்திட வைத்தாயே...
உருவிழந்தேன் நானடி - பிறருக்கு உபயோகமானேன் நானடி.. எல்லாம் உன்னால் தானடி...
மலையைக் காதலித்தால் மடுவாதல் தண்டனையோடி...
மீண்டும் வருவேன் நானடி...உன்னால் மீண்டும் உருமாற்றம் அடைந்திடத் தானடி....
கர்வம் கொள்ளாதேடி - கால வெள்ளத்தில் ஒருநாள் கடலாகிப் போவாய் நீயும் தானடி...
அன்று நாம் கலப்போமடி...
அதுவரை நான் உன்னை தழுவிட மீண்டும் மீண்டும் மேகமாய் வருவேனடி...
- பாலா(ஜி)
- பாலா(ஜி)
No comments:
Post a Comment