ஈழப்போர் - புரிந்து கொள்ளும் முயற்சி...
என் நண்பர் வீட்டிற்கு சென்றிருந்தேன். அங்கே நானும் நண்பரும் தமிழ் பற்றியும் ஈழப்போர் குறித்தும் விவாதித்துக் கொண்டிருந்தோம். அவர் மகன் (சுமார் ஐந்து வயது இருக்கும்) என்ன பேசுகிறோம் என்று புரியாமல் பார்த்துக்கொண்டிருந்தான். அந்த ஐந்து வயது சிறுவனுக்கு ஈழப்ப்போரை புரிய வைக்கும் என் முதல் முயற்சி கீழே உள்ளது...
எழுதிய பின் உணர்ந்தேன், இதெல்லாம் புரியாத குழந்தையாகவே நான் இருந்திருக்கலாமோ என்று...
சித்திக் கொடுமை நடக்குதம்மா சிங்கள (இலங்கை) நாட்டினிலே...
அப்பன் வேடிக்கை பார்க்கிறாரம்மா அண்டை (இந்தியா) நாட்டினிலே...
அக்கா மட்டும் அழுகிராளம்மா (தமிழகம்) ஓலைக் குடிசையிலே...
அப்பாவை மீறி எனக்குதவ அவளுக்கும் துணிச்சல் இல்லே...
மத்தெடுத்த சித்தியிடம் (சிங்கள அரசு) அப்பா கரண்டி (ஆயுதம்) கொடுத்தாரம்மா...
அவள் உள் காயம் மீதே சூடு ஒன்று போட்டாளம்மா...
தென்னை போல் என் வயது சூட்டில் தெரியுதம்மா...
அதில் உள்ள செத்த செல் (இறந்த தமிழர்கள்) இனி உயிர் பெறாதேயம்மா...
நீ சொன்ன சித்திக் கொடுமை இப்போ விளங்குதம்மா...
நான் பண்ண தப்பு மட்டும் விளங்கலயம்மா...
காட்டி அழப் பாட்டி (ஐ நா சபை) இல்லையம்மா...
அவளைப் பேசியே அப்பா விரட்டி விட்டாரம்மா...
போன வாரம் என் நகம் அவரின் கன்னம் கீரியதம்மா...
அதற்கு பரிசு தான் இந்த சூடா எனக் கேட்டு சொல்லம்மா...
கோழி மிதிச்சு குஞ்சு சாகாதுன்னு பழமொழி சொன்னியேம்மா...
குஞ்சு சாகும் வரை கோழி மிதிக்குமென்பது புதுமொழி ஆனதேம்மா...
என் மீது ஏறிச் செல்லப் பல பீரங்கி கத்திருக்கம்மா...
நான் ஏறிப் பரதேசம் செல்ல ஒரு ரயிலுவண்டி இல்லையம்மா...
ஓடிப்போக ஆசைதனம்மா...
பாழடைந்த வீடானாலும் நீ முச்சு விட்ட இடமாச்சேம்மா...
இந்த இருவரையும் நம்பி என்னைவிட்டு நீ போனதெங்கேம்மா...
நான் அங்கு வந்து சேரும் காலம் தொலைவில் இல்லையம்மா...
எனக்காக உலகெங்கும் பலர் அழுகிறார்கள் அம்மா...
நான் வடித்த குருதிக்கு அந்தக் கண்ணீர் ஈடாகாதேம்மா...
இத்தனை வலி பொறுக்கும் நான், ஈழத் தமிழனாம்மா...
இல்லை ஊரார் கேலி செய்வதுபோல், ஈனத் தமிழனாம்மா...
தமிழ் கூறும் நல்லுலகம் போனது எங்கேம்மா...
கூறாகிய தமிழினம் ஒன்றாவது எப்போம்மா...
- பாலா(ஜி)
No comments:
Post a Comment