Tuesday, February 14, 2012

என்ன தான் வேண்டும் உனக்கு...

வேண்டியதைக் தயங்காமல் கேள்...


ஒளி பிறக்க வழி என்னவென கேட்கிறேன் 
இருளில் கொண்டென்னை அடைக்கிறாய்

வெற்றிக்கு வழி என்னவென கேட்கிறேன் 
தோல்விகளில் துவளச் சொல்கிறாய்

என்ன நம்பும் ஜீவன் ஒன்று வேண்டுமென கேட்கிறேன்

உன்னை அன்றி வேறொருவர் இல்லையென சொல்கிறாய் 

வலிக்காத வாழ்வு வேண்டுமென கேட்கிறேன் 
வலிதாங்கும் உறுதிகொள் எனச் சொல்கிறாய் 

கடவுளே... என்னதான் வேண்டும் உனக்கு 
என்னைப்போல் மனம்திறந்து கேட்டுவிடு...
                                              - பாலா(ஜி)

1 comment:

  1. கடவுள் யாரென கேடுப்பார்
    விடை கிடைக்கும்
    கேள்விகள் அனைத்திற்கும்.. :)

    ReplyDelete