Tuesday, February 14, 2012

இன்பமுறவா... துன்பமுறவா...

இன்பமுறவா... துன்பமுறவா...

'தமிழ் இனி மெல்லச் சாகும்' என்ற மொழி கேட்டு
இன்பமுறவா... துன்பமுறவா...

அதை ஒரு நொடியில் அழிந்திடச் சொல்லாது மெல்லச் சாகும் எனச் சொன்னது கண்டு 
இன்பமுறவா... துன்பமுறவா...

அப்படி மெல்லச் சாகும் வேளையில் பீனிக்ஸ் பறவையைப் போல் உயிர்த்தெழும் என்ற என் நம்பிக்கையைக் நினைத்து
இன்பமுறவா... துன்பமுறவா...

மலை போன்ற தமிழ்ச் செம்மொழி மடுகாகிக் கொண்டிருக்கும் வேளையில் 
அணை கட்ட உதவும் அணில் போன்ற என் செயல்களைக் கண்டு 
இன்பமுறவா... துன்பமுறவா...

தமிழுக்காக நான் கதறும் ஓசை அதன் சாவின் ஒப்பாரி ஆகி விடுமோ என்ற என் ஐயம் நினைத்து  இன்பமுறவா... துன்பமுறவா...
                                              - பாலா(ஜி)

No comments:

Post a Comment