Showing posts with label சொல்வதைக் கேள் மகளே.... Show all posts
Showing posts with label சொல்வதைக் கேள் மகளே.... Show all posts

Monday, November 18, 2013

சொல்வதைக் கேள் மகளே...

சொல்வதைக் கேள் மகளே...

எழுத்தை சொல்லி - அதை 
எழுதச் சொல்லி

கருத்தை சொல்லி - அதை 
கருதச் சொல்லி

கதை சொல்லி - அதன்
உரை சொல்லி

உண்ண சொல்லி - அதை 
உறக்க சொல்லி

உறங்க சொல்லி - அதை
உறங்கும் வரை சொல்லி

பகிரச் சொல்லி - அதை 
பக்குவமாய்ச் சொல்லி

தினமும் பலமுறை சொல்லி
அதை ஒருமுறை கூட திட்டாமல் சொல்லி

கொஞ்சம் கொஞ்சமாய் சொல்லி - அதை
கொஞ்சிக் கொஞ்சி சொல்லி

எல்லாம் சொன்னபின் சொல்வாள்
'எனக்கு தெரியும் - நீ சொல்லாத'