Friday, May 24, 2013

பிரித்திட முடியுமா...

பிரித்திட முடியுமா...

கண்ணைப் பிரிந்தவன் காண்பதேது...
உன்னைப் பிரிந்து நான் வாழ்வதேது...

என் நிழலை என்னிடமிருந்து பிரித்து விட முடியும்...
உன் நினைவைப் பிரிக்க முடியுமா...

என் நிழலை என்னிடமிருந்து பிரிக்க - சூரியன் வேண்டும்...
உன் நினைவை என்னிடமிருந்து பிரிக்க - உன் தங்கை போதும்...

அன்னையின் பதில்...

அன்னையின் பதில்...

அங்கிருப்பவற்றைச் சொன்னவனே...
இங்கிருப்பதைக் கூறுகிறேன் - நினைவுகூர்...

உன்னைக் காணாது
உணவை விட மருந்தை அதிகம் உண்ணும்
தாயுண்டு... தந்தையுண்டு...

கண்ணால் skype ல் கண்டபின்...
உச்சி முகரத் துடிக்கும் உள்ளமுண்டு...

பிறை விழுந்த கண்ணால் அரைகுறையாய் கண்ட உன்னை
சிகிச்சை முடிந்தபின் முழுமையாய்க் காண ஏங்கும் கண்களுண்டு...

கூன் விழுமுன் தன பெயரனுடன் விளையாடத்
துடிக்கும் மனமுண்டு...

கல்லைப் பொன்னாய் மற்றும் மண்ணுண்டு...
மண்ணை வளம் செய்யும் மடுகுண்டு...

இனியேதும் காரணம் சொல்லாது...
உடனே கிளம்பி வா ஊருக்கு...
மணமுடிக்க மாமன் பொண்ணு காத்திருக்கு...


Thursday, May 16, 2013

கடவுளும் கண்ணாமூச்சியும்...

கடவுளும் கண்ணாமூச்சியும்...

கண் திறந்த கடவுள் சிலையிடம்
கண் மூடி வேண்டினான் மனிதன்...

'கடவுளே! என் கண்ணைத் திற...
என்னிடம் கண்ணாமூச்சி ஆடாதே
எனக்குத் தெரியும் நீ  செய்திடுவாய் என' என்று...

கடவுள் எண்ணினார்...

கடமையைச் செய் பலனை எதிர்பாராதே என்றேன் - கேட்கவில்லை
உன் கண்ணில் உள்ள தூசியை எடுத்து விட்டு பிறர் கண்ணைப் பற்றி பேசு என்றேன் - புரியவில்லை
உன் ஒட்டகத்தைக் கட்டி விட்டு  பின் தூங்கச் செல் என்றேன் - ஏற்கவில்லை

இனி என்னிடம் சொல்வதற்கோ, செய்வதற்கோ ஒன்றுமில்லை...
இவனின் மூடிய கண்களை திறந்திட வாய்ப்பில்லை...