கடவுளும் கண்ணாமூச்சியும்...
கண் திறந்த கடவுள் சிலையிடம்
கண் மூடி வேண்டினான் மனிதன்...
'கடவுளே! என் கண்ணைத் திற...
என்னிடம் கண்ணாமூச்சி ஆடாதே
எனக்குத் தெரியும் நீ செய்திடுவாய் என' என்று...
கடவுள் எண்ணினார்...
கடமையைச் செய் பலனை எதிர்பாராதே என்றேன் - கேட்கவில்லை
உன் கண்ணில் உள்ள தூசியை எடுத்து விட்டு பிறர் கண்ணைப் பற்றி பேசு என்றேன் - புரியவில்லை
உன் ஒட்டகத்தைக் கட்டி விட்டு பின் தூங்கச் செல் என்றேன் - ஏற்கவில்லை
இனி என்னிடம் சொல்வதற்கோ, செய்வதற்கோ ஒன்றுமில்லை...
இவனின் மூடிய கண்களை திறந்திட வாய்ப்பில்லை...

No comments:
Post a Comment