Saturday, September 14, 2013

துள்ளவோ... துவளவோ...

துள்ளவோ... துவளவோ...

இருப்பபோரை விட புதிதாக வருவோரின் (இளம் தலைமுறையின்) அறிவு கண்டு
துள்ளவோ...
இருப்போரின் பேராசையால் அவதியுறும் பூமி...
இனி வருவோரின் ஆசையால் ஆகப்போகும் நிலை எண்ணி
துவளவோ...

இந்நாளில் செவ்வாயில் நீர் அறியப்பட்டது கண்டு
துள்ளவோ...
செவ்வாயில் இருப்பதாய் சொல்கின்ற நீரை நம்பி - மனிதன்
பூமியில் இருக்கும் நீருக்கு இழைக்கும் அநீதி கண்டு
துவளவோ...

இத்தலைமுறை 'ஒரு குடும்பம் ஒரு குழந்தை' என்ற கொள்கை கண்டு
துள்ளவோ...
பின்வரும் தலைமுறை சகோதரப் பாசம் என்னவென்று
அறியாமல் போகும் நிலை எண்ணி
துவளவோ...


No comments:

Post a Comment