Monday, November 18, 2013

உலா...

உலா...

பஞ்சு மெத்தை தேகம் - அதில்
பதுக்கி வச்ச மேகம்...

கொஞ்சிப் பேசும் கண்கள் - அவை
பகலில் தெரியும் விண்மீன்கள்...

சங்குக் கழுத்து ஒன்றும் - அது
தந்திடும் சங்க நாதம் என்றும்...

கேள்விக் குறியென செவிகள் - அதைக்
காண முயன்றால் முறைக்கும் விழிகள்...

கூந்தல் அமர்ந்திடும் இடை - அதன்
அழகைக் கூட்டிடும் அவள் நடை...

கழுத்தில் மின்னிடும் (தங்க) நகை - அதனைப்
போட்டியின்றி வென்றிடும் புன்னகை...

எல்லாம் ஒன்றாய் கொண்டதனால்...

கால்கொண்டு நடக்கும் நிலா என்பேன் -
அவள் மிதந்து செல்வதை நான் உலா என்பேன்...

சொல்வதைக் கேள் மகளே...

சொல்வதைக் கேள் மகளே...

எழுத்தை சொல்லி - அதை 
எழுதச் சொல்லி

கருத்தை சொல்லி - அதை 
கருதச் சொல்லி

கதை சொல்லி - அதன்
உரை சொல்லி

உண்ண சொல்லி - அதை 
உறக்க சொல்லி

உறங்க சொல்லி - அதை
உறங்கும் வரை சொல்லி

பகிரச் சொல்லி - அதை 
பக்குவமாய்ச் சொல்லி

தினமும் பலமுறை சொல்லி
அதை ஒருமுறை கூட திட்டாமல் சொல்லி

கொஞ்சம் கொஞ்சமாய் சொல்லி - அதை
கொஞ்சிக் கொஞ்சி சொல்லி

எல்லாம் சொன்னபின் சொல்வாள்
'எனக்கு தெரியும் - நீ சொல்லாத'