Tuesday, April 2, 2013

கனவில் வாழ்கிறேன் நான்...

கனவில் வாழ்கிறேன் நான்...

கண்மூடிக் கிடக்கிறேன் நான்...
கனவில் வாழ்கிறேன் நான்...

கண் திறந்தால்...
நிஜம் காண பயம் தான் 
நிம்மதியற்ற வாழ்க்கை தான்...

கனவில் சாதனைகள் ஈடேறும்...
நிஜத்தில் வேதனைகள் பின்தொடரும்...

கனவில் வாழ்க்கை காதலியுடன்...
நிஜத்தில் அதுவே தனிமையுடன்...

நிஜம் என்ற ஒன்று இல்லாமல் இருந்திருந்தால்...
கனவிலேயே களித்திருப்பேன் - நான் 
கருவிலேயே வாழ்ந்து முடித்திருப்பேன்...

Tuesday, March 26, 2013

விலைமாது...



விலைமாது...

காதலைக் கேட்டேன்...
காமத்தைத் தந்தாள்...

கருவறையைக் கேட்டேன்...
கழிப்பறையைத் தந்தாள்...

உள்ளம் கேட்டேன்...
உதட்டைத் தந்தாள்...

நாணம் யாதெனைக் கேட்டேன்...
என்னை நாணிடைச்  செய்தாள்...

வாழ்விற்கு விலையேது என்று கேட்டேன் - இவ்வுலகில்
எல்லாவற்றிற்கும் ஒரு விலையுண்டு என்றாள்...

பதில்கள் எல்லாம் சரி...
கேள்விகள் தான் தவறு என்றார்கள்
அவளை இந்நிலைக்கிட்டவர்கள்...

விலைமாது - அவள் இழந்தவற்றிர்க்கு
விலையேது...

Tuesday, February 26, 2013

பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

 
பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

நீ நூறு ஆண்டுகள் நீடூடி வாழ வாழ்த்துகிறேன்...
பின் மனித இனத்தின் சிந்தனையில்
ஆயிரம் ஆண்டுகள் வாழ வாழ்த்துகிறேன்...

இவ்வுலகில் ஒவ்வொரு நாளும் வாழ்ந்திடு...
ஒரு நாளும் பிழைக்காதே...
பிழைத்தல் பிச்சைக்கு சமம்...

பிழைக்கைத் தெரியாதவனாய் இரு - தவறில்லை
வாழத் தெரியாதவனாய் இருந்திடாதே...

வாழ்வாங்கு வாழ்வதே வாழ்வு...
என் கடன் பணி செய்து கிடப்பதே...

பாேன்ற  பாென்  மொழிகளை மறவாதே...

உன் பணி பிறர்க்கும் பயணுள்ளதாய் இருக்க வாழ்த்துகிறேன்...

நலமும் வளமும்  பெற்று வாழ இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்...

Wednesday, February 13, 2013

ஈழத்தமிழன்

ஈழத்தமிழன்

தமிழன் என்று சொல்லடா...
தலை நிமிர்ந்து நில்லடா - உலகெங்கிலும்
ஈழம் தவிர...

ஈழத்தில்,
நின்ற தலை நிலத்தில் விழுந்திடுதாம்
பிறந்த பிள்ளை கருவுக்குள் புகுந்திடுதாம்...

Saturday, December 8, 2012

அழுகை ஓர் அழகு...

அழுகை ஓர் அழகு...

அவள்
தேம்பி தேம்பி அழுவதும்
ஒரு தெவிட்டாத அழகு தான்

மூச்சிரைத்து அழுவதும்
முகம் புதைத்து அழுவதும்
முத்தான அழகுதான்

கண்ணீர் கரை புரண்டோட அழுவதும்
கண் வற்றும் வரை அழுவதும்
காணக் கிடைக்காத அழகுதான்

இந்த எட்டு வயது பெதும்பைக்குத் (பெண்ணுக்குத்) தான்
எத்தனை அழுகை தெரியுதடா...
நான் வங்கித் தந்த எதுவும் அந்த அழுகையை நிறுத்த உதவலயடா...

                               - பாலா(ஜி)

Saturday, November 17, 2012

கொசுவின் சங்கீதம்


கொசுவின் சங்கீதம் 

யார் கற்று தந்த பாடல் இது...
யாருக்காக பாடப்படும் பாடல் இது...

என்
ஒவ்வொரு காதுக்கும் தனித்தனியாய்...
ஒரே ராகத்தில் தன்னந் தனியாய்...

பாடி நீ களைக்க மாட்டாயா...
பாடியபின் இளைக்க மாட்டாயா...

பாடியதால் பிழைக்கிறாயோ...
என்னிடம்
பிழைத்ததால் பாடுகிறாயோ...

நீ பாடும் பாட்டில் நான் கண்ட பிழை
என்றொன்றிருந்தால்
அது நீ பாடும் வேளையிலன்ரோ...

மரித்தபின் உணர்வாயோ
கொசுவே....
உன் பாடல் தற்கொலைக்கு முன்பான ஒப்பாரி என்பதை...

                                                         - பாலா(ஜி)

Friday, October 26, 2012

கனவு...


கனவு...


தூக்கத்தில் வருவதல்ல கனவு
தூங்கவிடாது துரத்துவதே கனவு

காண்பதெல்லாம் ஆகிவிடாது கனவு
கண்டுவிடத் துடிக்க வைப்பதாம் கனவு

பிறர் பாராட்ட சொல்வதல்ல கனவு
தன்னைத் தட்டி எழுப்புவுதே கனவு

ஒரு நாளில் எளிதில் மெய்ப்படுவதல்ல கனவு
ஒரு நாள் மெய்ப்படும் என்று நம்பிக்கையூற்றி
ஒவ்வொரு நாளும் உழைக்கத் தூண்டுவதே கனவு

இப்படி ஒரு கனவு மெய்ப்பட முனைந்து விட்டால்
பின் தூக்கமேது... வாழ்வில் துக்கமேது...

                                                        - பாலா(ஜி)