Saturday, November 17, 2012

கொசுவின் சங்கீதம்


கொசுவின் சங்கீதம் 

யார் கற்று தந்த பாடல் இது...
யாருக்காக பாடப்படும் பாடல் இது...

என்
ஒவ்வொரு காதுக்கும் தனித்தனியாய்...
ஒரே ராகத்தில் தன்னந் தனியாய்...

பாடி நீ களைக்க மாட்டாயா...
பாடியபின் இளைக்க மாட்டாயா...

பாடியதால் பிழைக்கிறாயோ...
என்னிடம்
பிழைத்ததால் பாடுகிறாயோ...

நீ பாடும் பாட்டில் நான் கண்ட பிழை
என்றொன்றிருந்தால்
அது நீ பாடும் வேளையிலன்ரோ...

மரித்தபின் உணர்வாயோ
கொசுவே....
உன் பாடல் தற்கொலைக்கு முன்பான ஒப்பாரி என்பதை...

                                                         - பாலா(ஜி)